வ்வொரும் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறோம். ஒருசிலரிடம் இனம்புரியாத அன்பு ஏற்படும். ஒருசிலரிடம் காரணமில்லாத கோபம், எரிச்சல் ஏற்படும். இதற்குக் காரணம் சஷ்டாஷ்டக தோஷமாகும்.

Advertisment

ஒருவரின் ராசி மற்றொருவரின் ராசிக்கு 6, 8-ஆவது ராசியாக வந்தால் சஷ்டாஷ்டக தோஷமாகும். மிகமுக்கியமாக, திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் ராசியும், பெண் ராசியும் 6-ஆவது, 8-ஆவது ராசியாக வந்தால் சஷ்டாஷ்டக தோஷமாகும்.

ஜோதிடம் வளர்ந்துவரும் இந்த காலத்தில், படித்தவர்முதல் பாமரர்வரை ஜாதகம் வாங்கியவுடன் ஆணின் ராசியும், பெண்ணின் ராசியும் பொருந்துகிறதா என்றே முதலில் பார்க்கிறார்கள்.

ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் உள்ள கலியுகத்தில் திருமணத்திற்கு வது, வரன் கிடைப்பதே குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக இருக்கிறது. அத்துடன் ஒரு ஜாதகத்தை இணைக்கும்முன் பத்து ஜோதிடரை சந்தித்து, ஐந்து ஜோதிடர் சரி என்று கூறியபிறகு திருமணத்தை முடிவு செய்யும் நிலையும் இருக்கிறது. வரன் தேடி அலுத்து, திருமணத்திற்கு நல்ல வரன் கிடைத்தால் போதும்; ஜாதகமே வேண்டாம் என்று ஜோதிடத்தைப் புறக்கணிப் பவர்களும் இருக்கிறார்கள். சஷ்டாஷ்டக ஜாதகத்தை இணைக்கலாமா? இணைத் தால் என்ன நடக்கும் என்னும் கேள்வியும் பலரிடம் இருந்துவருகிறது. இதற்குத் தீர்வு என்ன என்பதை ஜோதிடரீதியாகப் பார்க்கலாம்.

Advertisment

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது, பெண்ணின் ராசிமுதல் ஆணின் ராசிவரை எண்ணும்போது ஆணின் ராசி ஆறாவதாகவும், ஆணின் ராசியிலிருந்து பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வந்தால் அது ‘"சஷ்டாஷ்டகம்’' எனும் தோஷமாகும்.

இதற்கு விதிவிலக்கும் உண்டு. இதில் சில அனுகூல சஷ்டாஷ்டகம் எனவும், சில பிரதிகூல சஷ்டாஷ்டகம் எனவும் கூறப்படுகிறது.

அனுகூல சஷ்டாஷ்டகம்

ramar

பெண் ராசி- ஆண் ராசி

மேஷம்- கன்னி

தனுசு- ரிஷபம்

துலாம்- மீனம்

கும்பம்- கடகம்

சிம்மம்- மகரம்

மிதுனம்- விருச்சகம்

பிரதிகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி- ஆண் ராசி

ரிஷபம்- துலாம்

கடகம்- தனுசு

கன்னி- கும்பம்

விருச்சகம்- மேஷம்

மகரம்- மிதுனம்

மீனம்- சிம்மம்

Advertisment

ஆண், பெண் இருவருடைய ராசியும் 6, 8-ஆக இருந்தாலும், அனுகூல சஷ்டாஷ்டகமாக இருந்தால் திருமணம் செய்யலாம் எனவும், பிரதிகூல சஷ்டாஷ்டக மாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது என்னும் கருத்தும் உள்ளது.

ஆண்- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளில் பிறந்து, பெண்- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆண் ராசிகளில் பிறந்திருந்தால் இதனை ‘ அனுகூல சஷ்டாஷ்டகம் எனவும், சஷ்டாஷ்டக தோஷ நிவர்த்தி -திருமணம் செய்யலாம் எனவும் கூறுகிறார்கள்.

அதேபோல் ராசி அதிபதி ஒருவராக இருந்தாலும் தோஷம் கிடையாது என்னும் விதியும் உள்ளது. இந்த விதியின்படி மேஷம்- விருச்சிகம், ரிஷபம்- துலாம் ஆகிய இரண்டு இணை ராசிகளுக்கும் சஷ்டாஷ்டக தோஷமில்லை என்னும் கருத்தும் உள்ளது. ராசி அதிபதிகள் நட்புடன் இருந்தாலும் இந்த தோஷம் பாதிக்காது என்னும் கருத்தும் உணடு.

சஷ்டாஷ்டக ஜாதகத்தை இணைத்தால் கணவன் -மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாக இருப்பதுடன், நிம்மதியின்மை, குழந்தை பாக்கியத்திலும் பிரச்சினை இருந்து, விவாகரத்து நடக்கும் என்பது ஜோதிடரீதியான, அனுபவரீதியான விளக்கம்.

உளவியல்ரீதியாக இருபது ஆண்டுக்கு முன்வரை, பெண்கள் திருமணத்திற்குமுன் பெற்றோருக்கும், பின் கணவருக்கும் கட்டுப் பட்டு வாழ்ந்தனர். ஆண்கள் பெற்றோருக்குக் கட்டுப்பட்டனர். பெற்றோரின் பேச்சுக்கு எதிர்பேச்சே இல்லாதிருந்த காலத்தில் பல திருமணங்கள் பொருத்தம் பார்க்காமலே நடந்தன. இன்றைய காலகட்டத்தில் காரணமே இல்லாத பிரச்சினைக்குக்கூட நீதிமன்றத்தை நாடி, திருமணத்தை ரத்து செய்யுமாறு கேட்கின்றனர். மேலும், விவா கரத்திற்கு ஜோதிடரை அணுகும் கலாச்சாரம் வெகுவாகப் பரவிவருகிறது.

எனவே, இதற்குத் தீர்வு சஷ்டாஷ்டக ஜாதகத்தைத் தவிர்ப்பதே. சஷ்டாஷ்டக ஜாதகத்தை இணைக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தால் ஆண் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் திரிகோண சம்பந்தம் பெறுவ துடன், பெண் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரனுக்கும் திரிகோண சம்பந்தம் இருந் தால் கருத்து வேறுபாடு பிரிவினையாக மாறாது.

ராசிக்கு 6, 8-ஆக இல்லாமல் இருப் பதுடன், லக்னத்திற்கும் 6, 8-ஆக இல்லாமல் இருப்பது மிகச்சிறப்பு. இந்த விதியைத் திருமணப் பொருத்தத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல், தொழில்கூட்டாளி, நண்பர்கள், அண்டை அயலாருடனும் அறிந்து பழகினால் பெரும் சங்கடங்கள் தவிர்க்கப்படும்.

சஷ்டாஷ்டக தோஷம் தொடர்பாக இங்கே வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழும். அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒருவருடைய ராசியை எப்படி அறிவது என்பதே. பேருந்தில் பயணம் செய்கிறோம். பக்கத்து இருக்கை காலியாக இருக்கிறது. ஒரு புதிய நபர் பேருந்தில் ஏறுகிறார். அந்த புதிய நபருக்கு உட்கார இடம் தந்து, அவரிடம் சகஜமாகப் பேசிக்கொண்டு வந்தால் நட்பு ராசி என புரிந்துகொள்ளலாம். அந்த புதிய நபர் உங்களுக்கு இடையூறு செய்யும்வண்ணம் அமர்ந்தால் புதிய நபருக்கும் உங்களுக்கும் சஷ்டாஷ்டக தோஷம் உள்ளது என புரிந்துகொள்ள முடியும்.

ஒரு புதிய நபரை சந்திக்கும்போது உருவாகும் ஈர்ப்பு, உள்ளுணர்வைக் கொண்டும் சஷ்டாஷ்டக தோஷம் உள்ளதா? இல்லையா என்பதை அறிய முடியும். ஆகவே, சஷ்டாஷ்டக தோஷம் அறிந்து வாழ்க்கைத்துணையையும், நண்பர்களையும் தேர்வுசெய்தால் நலம் பல பெருகும்.

செல்: 98652 20406